முதுநிலை மருத்துவ படிப்பு: கவுன்சிலிங் தேதி மாற்றம்

டில்லி:

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்தும், இந்த   முதுநிலை மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங், கடந்த 17ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘ஆன்லைன்’ கவுன்சிலிங்கில் விருப்பமான இடங்களை தேர்வு செய்வதில் நடைமுறை பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதை சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 17ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதல் கட்ட கவுன்சிலிங் இன்று (26ந்தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2வது கட்ட கவுன்சிலிங் ஏற்கனவே அறிவித்தபடி   ஏப். 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.