முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு… மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு

சென்னை:

முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அனைத்து வகையான  கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, இளநிலை பொறியியலில் முதல் மூன்று ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதுகலை பொறியிய லில் முதலாமாண்டு, எம்.சி.ஏ. முதல் மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்கும் நடப்பு பருவத் தேர்வில் இருந்து விலக்களித்து அடுத்த கல்வியாண்டுச்செல்ல அனுமதியளித்துள்ளது. ஆனால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில்,  ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் நடக்க இருந்த முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவிப்பில், கொரோனா பணியில் மருத்துவர்கள் மும்முரமாக இருப்பதால், ஏற்கனவே அறிவித்தபடி, தேர்வு நடத்தமுடியாத சூழல் உள்ளது. இதனால், தேர்வு 3 மாதம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.