முதுநிலை மருத்துவ மேற்படிப்பு: கலந்தாய்வு இன்று தொடங்கியது

சென்னை:

மிழகத்தில் முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., – எம்.டி.எஸ்., டிஎன்பி, எம்சிஎச் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

இந்த கலந்தாய்வு இன்று முதல்  23-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.  இன்று, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் நாளை முதல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 10 ஆயிரத்து, 108 பேர் இந்த கலந்தாய்வில்  இடம் பெற்றுள்ளனர்.