சென்னை,

 ஜெயலலிதா மறைவு குறித்தும், சசிகலா தேர்வு செய்யப்பட்டது குறித்தும் இன்று காலை முன்னாள் சட்டமன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் பல அதிரடி கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,. அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டை யன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது செங்கோட்டையன் கூறியதாவது,

எம்.ஜி.ஆர் மறைந்தபோதும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்தான் இந்த பி.எச்.பாண்டியன் என்று கூறினார்.

மேலும், அதிமுக இரண்டாக உடைந்தபோதும், இரட்டை இலை முடக்கப்பட்டபோதும் எந்தவித உதவியும் செய்யாமல் திமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

மறைந்த ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாகவே இருந்தவரே இந்த பி.எச்.பாண்டியன் தான் என்று அதிரடி குற்றச்சாட்டையும் கூறினார்.

ஜெயலலிதாவிற்கு  இந்த துன்பம் யாரால்  வந்தது, இடர்பாடுகள் யாரால் வந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

ஒரே குடும்பத்தில் இருந்த 5 பேருக்கு கட்சி பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. இன்று அவருக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்.

ஜெயலலிதாவிடம் இருந்து பல நலன்களைப்பெற்ற P.H பாண்டியன் இன்று துரோகிகளுடன் சேர்ந்து செயல்படுகிறார்:  துரோகிகளோடு சேர்ந்து குழப்பம் விளைவிக்க முயல்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.