Random image

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் மருத்து வணிகர்கள் 1 நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

டில்லி:

ன்லைன் மருந்து வணிகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 நாட்கள் கடை அடைத்த மருந்து வணிகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. அனைத்திந்திய மருந்தகங்களின் கூட்டமைப்பு  அமைப்பு இந்த அறிக்கை வெளியிட்டுஉள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மருந்தகங்களின் கூட்டமைப்பு (All-India Organisation of Chemists and Druggists (AIOCD))  பொதுச்செயலாளர்  ராஜீவ்சிங்கால், ஆன்டிலன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் 27ந்தேதி நள்ளிரவு முதல் 28ந்தேதி நள்ளிரவு வரை அனைத்து மருந்து வணிகம் தொடர்பான கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்படும் என்று கூறி உள்ளார்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள  சுமார் 8.5 லட்சம் மருந்து கடை வணிகர்கள் பங்கேற்கிறார்கள் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை காப்பற்ற இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறி உள்ளார்.

இதற்கிடையில் மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் மருந்துகளின் ஆன்லைன் விற்பனைகளை ஒழுங்கு படுத்துவதற்கான வரைவு விதிகள் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன்படி மின் மருந்தகம் சட்டபூர்வமாக இயங்குவதற்கான ஒப்புதல் அளித்தது.  மேலும் மக்கள்  ஆன்லைன் மருந்துகள் வாங்கும்போது, மருந்துகளின் விலையை 15-30 சதவிகிதம் குறையும் என்று கூறி உள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் மருந்து வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்த போராட்டம் நடைபெற உள்ளது.