மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான எரிமலைகளில் மிக முக்கியமானது ‘டால்’ என்ற எரிமலை. இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்து சிதறியுள்ளது.

இந்த எரிமலை ஏற்கனவே ஒருமுறை வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மீண்டும் வெடித்துள்ள நிலையில் அதன் சாம்பல் மண்டலம் 1 கி.மீ. உயரத்திற்கு மேல் எழுந்து வருகிறது.

இதனால், அப்பகுதியே புகைமண்டலத்தால் சூழப்பட்டுள்ளது.
இந்த வெடிப்படையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த எரிமலை வெடிப்பால் மணிலா விமான ஓடுதளமும் மூடப்பட்டுள்ளது. சுமார் 170 வரையிலான விமான ச‍ேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் எரிமலை வெடிப்பை புகைப்படமும் எடுத்துள்ளனர்!