கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல் நலம் சரி இல்லாததால், அவர் அங்குள்ள ’’ரிம்ஸ்’’ மருத்துவமனையை சேர்ந்த சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்நிலையில், அங்கிருந்த படி, லாலு பிரசாத் யாதவ்,பீகார் மாநில ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தனது கட்சிக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராஞ்சி சிறைத்துறை அதிகாரிகளும்  சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள லாலுவுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்த அதிகாரிகள் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன.
இதனால், மருத்துவமனை பங்களாவில் இருந்து லாலு பிரசாத் யாதவ் , அங்குள்ள சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
’ரிம்ஸ்’’ மருத்துவமனை இயக்குநர் அலுவலத்தில் உள்ள தொலைபேசியை லாலு, பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு, ராஞ்சி சிறைத்துறை அதிகாரிகளுக்கு,மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

-பா.பாரதி.