பங்களாதேஷ்: மழையில் முத்தமிட்ட ஜோடியின் புகைப்படம் வைரல்….போட்டோகிராபர் மீது தாக்குதல்

டாக்கா:

பங்களாதேஷை சேர்ந்தவர் ஜிபான் அகமது. இணைய தள இதழ் போட்டோகிராபர். பங்களாதேஷில் பருவ மழை தற்போது பெய்து வருகிறது. டாக்கா பல்கலைக்கழகம் அருகே மழையில் நனைந்து கொண்டே ஒரு இளம் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்ட காட்சியை இவர் படம் பிடித்தார்.

அந்த ஜோடிக்கு பின்னால், ஒரு தம்பதியர் தங்களது டீக்கடை தொழிலை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு நபர் குடை பிடித்துக் கொண்டு செல்போனில் நம்பர் தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தை அகமது இணையதளத்தில் வெளியிட்டார். உடனடியாக இந்த புகைப்படம் வைரலானது. பலர் இந்த அழகான காட்சி என பாராட்டி கருத்து வெளியிட்டனர்.

அதே சமயம் இந்த புகைப்படம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. பங்களாதேஷ் நாட்டினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை நீடித்து வரும் நிலையில் இந்த புகைப்படத்து க்கும் கண்டனங்கள் எழுந்தது.

இணையளத்தில் இருந்த பிரச்னை பூமிக்குள் குதித்தது. டாக்கா பல்கலை க்கழக போட்டோகிராபர்களால் அகமது தாக்கப்பட்டார். அதோடு அகமது பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சமூக வலை தளங்களில் செய்தி பரவியுள்ளது.

புகைப்படம் மூலம் பரபரப்பு ஏற்படுத்துவது அகமதுக்கு இது முதன் முறை கிடையாது. இதற்கு முன்பு பங்களாதேஷி-அமெரிக்க நாத்திகர் அவிஜித் ராய் மீது 2015ம் ஆண்டில் நடந்த கொலை வெறி தாக்குதலை படம் பிடித்தார்.

ரத்தம் படிந்த ஆடைகளுடன் இருந்த ராய் மனைவியின் புகைப்படத்தை இவர் வெளியிட்டு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.