காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதி யார்?  : வைரலாகும் புகைப்படம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என ஒரு இளைஞரின்  புகைப்படம் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தற்போதைய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி பதவி வகித்து வருகிறார்.   காஞ்சி மடத்தின் வழக்கப்படி வேத பாடசாலையில் வேத விற்பன்னராகத் திகழும் இளைஞர் ஒருவரைச் சிறு வயதில் அடுத்த மடாதிபதியாக அறிவிப்பது வழக்கமாகும்.   அவ்வாறு அறிவிக்கப்பட்டவருக்கு மடாதிபதியாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சன்னியாசம் வழங்கப்படும்.

தற்போது ஒரு இளைஞர் தனது தாய் தந்தையுடன் விஜயேந்திர சரஸ்வதியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி அதில் உள்ள இளைஞ்ர் அடுத்த மடாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.   இந்த புகைப்படம் பலராலும் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.   ஆயினும் இந்த செய்தியைக் காஞ்சி சங்கர மடம் உறுதி செய்யவில்லை.

அந்த புகைப்படத்தில் உள்ள இளைஞர் தேவதத்தா பாடில் மற்றும் அபர்ணா ஆகியோரின் மகனான 16 வயதான பிரியவ்ரதா ஆவார்.   இவர் வேத பாடத் தேர்வில் 14 ஆம் நிலை தேர்வைச் சிறு வயதில் முடித்த முதல் மாணவர் ஆவார்.   இவருக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அப்போது பாராட்டு தெரிவித்துள்ளனர்.

https://www.patrikai.com/modi-congratulated-youngest-student-who-passed-mahapariksha-in-vedic-exams/