அம்பானி மகள் திருமணத்தின் அரிய புகைப்படங்கள்

மும்பை

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தொழிலதிபரான ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் தொழிலதிபதி அஜய் பரிமள் மகன் ஆனந்துக்கும் நேற்று இரவு மும்பையில் திருமணம் நடந்துள்ளது. மும்பையில் அம்பானியின் இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் ஏராளமான விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.

பிரபல தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்ட இந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த திருமணத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகரக்ளும் கலந்துக்கொண்டனர்.