நமீதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்

திருமலை :

மீதாவுக்கும் அவரது காதலர் வீரேந்திர சவுத்திரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

இவர்களது திருமணம் நாளை இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் நடக்க இருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமீதா. இவர், தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருப்பதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிகழ்வில் நடிகை சினேகா, அவரது கணவர் பிரசன்னா உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். நாளை திருப்பதி தாமரை கோயில் என்கிற இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் நமீதா, வீரேந்திர சவுத்ரியின் திருமணம் நடக்க இருக்கிறது.

இதில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.