செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் ஜி.வெங்கட்ராம் கைவண்ணத்தில் ராஜா ரவி வர்மாவின் கலை நயம் மிகுந்த போட்டோசூட்…!

இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை வெளியில் எடுத்துக்காட்டியவர் ராஜா ரவி வர்மா.

மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார்.பெண்களை தெய்வீகமாக சித்தரித்தார்.

கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்

இவரின் மாமாவான ராஜா ராஜவர்மாவிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .வாட்டர் பெய்ண்டிங் முறையை ராமசாமி நாயுடு கற்றுத்தந்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார்.

தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் “ஆயில் பைன்டிங்” எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார்.

இந்திய கல்விக் கடவுளான சரஸ்வதியின் முதல் ஓவியத்தை வரைந்தது இவர்தான். இவருடைய ஓவியங்களை மையமாக வைத்து பலமுறை போட்டோஷூட் உலகம் முழுவதும் நடந்துள்ளது.

தற்போது வெங்கட் ராம் என்னும் புகைப்படக்கலைஞர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளை வைத்து மிகவும் துல்லியமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஷூட்டில் தற்போதைய முன்னணி நடிகைகளான சமந்தா, ஸ்ருதிஹாசன் மற்றும் முன்னாள் முன்னணி நடிகைகளான ஷோபனா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் இளம்பெற்றுள்ளனர். ரவி வர்மாவின் ஓவியங்களுக்கு உயிர்தந்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-