முங்கேலி, சத்தீஸ்கர்

ந்தியில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி “கோன் பனேகா க்ரோர்பதி”. இந்த நிகழ்ச்சி இது வரை ஒன்பதாவது சீசன் வரை வந்துள்ளது.  இதை நிகழ்த்துபவர் புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப் பச்சன்.  தற்போது சோனி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டு வருகிறது.  இதன் தமிழ் வடிவமான “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” நிகழ்ச்சி முன்பு தமிழ் தொலைக்காட்சியில் நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களில் ஒருவர் சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள முங்கேலி மாவட்ட துணை ஆட்சியாளர் அனுராதா அகர்வால்.  இவர் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். அவர் கணவர் தீன்தயாள் அகர்வால்.  இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு கணவர் ஊக்கம் கொடுத்ததால் தனது படிப்பை தொடர்ந்து தற்போது துணை கலெக்டர் ஆகியுள்ளார் அனுராதா.  இரண்டு வயதிலிருந்து போலியோவால் பாதிப்பு அடைந்த அவரை தீன்தயாள் ஒரு கணவனைப் போல் மட்டும் அல்லாமல் தாயைப் போல கவனித்துக் கொள்வதாக கண்ணீருடன் அனுராதா தெரிவித்தார்.  மேலும் கணவர் இல்லை எனில் தான் இந்த அளவு உயர்ந்திருக்க முடியாது எனவும் கூறி உள்ளார்.

தனக்கு கிடைக்கப் போகும் பரிசுப் பணத்தைக் கொண்டு தனது கணவருக்கு ஒரு ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துத் தர தான் விரும்புவதாக அனுராதா கூறி உள்ளார்.  அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்த தீன்தயாளுக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டுக்களை பார்வையாளர்கள் அளித்துள்ளனர்.