எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை,  மகன் சரண் தகவல்..

எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்து வமனையில்  சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப் பட்டு வருகிறது. அவர் உடல் நலம் பெற திரையுலகினர் ரசிகர்க்ள் கூட்டு பிரார்த்தனை செய்தனர் அவரது உடல் நிலை தேறிவருவதாகமகன் எஸ்பி சரண் தெரிவித்தார்.

இன்று மாலை சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:அப்பா எஸ்பியின்  உடல்நிலை சீராக உள்ளது. நான் இன்று  மருத்துவமனை செல்ல வில்லை. டாக்டர்கஇடம் பேசினேன்.  அப்பாவுக்கு  நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரார்த்தனை களும் கைகொடுத்து வருகிறது. பழைய நிலைக்கு அவர் திரும்பிக்கொண்டிருக்கிறார்.

எஸ்பிபி  உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது அவரது உடல்நிலை குறித்து வரும் நாட்களில் நான் இன்னும் விரிவாக அப்டேஸ் தருவேன். அப்பா உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா தொற்று பாசிடி வாக இருக்கிறது. இன்னும் சிகிச்சை தொடர்கிறது.
இவ்வாறு சரண் கூறினார்.

முன்னதாக நேற்று மாலை சரண் வெளியிட்ட வீடியோவில்,’ எஸ்பிபி உடல்நிலை  சீராக அவர் அறையில் பாடல்கள் ஒலிக்கவைக்கப்படிருக்கிறது அதை கேட்டபடி விரல்களால் தாளம் போடுகிறார். எதையோ எழுதி காட்ட முயன்றார். ஆனால் பேனாவை அவரால் பிடிக்க முடியவில்லை. அடுத்த வாரம் எழுதி காட்டும் அளவுக்கு தேறுவார். அவருக்கு பத்திரிகை படித்துக்காட்டப்படு கிறது. டாக்டர்கள் கேட்பதற்கு பதில் அளிக்கிறார்’’ என்றார்.