கொரோனா தொற்றினால் நடிகை பியாவின் சகோதரர் மறைவு….!

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய ‘பொய் சொல்ல போறோம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய்,

https://twitter.com/PiaBajpai/status/1389390533857054722

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பியா பாஜ்பாயின் சகோதரர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். முன்னதாக அவர் சமூக ஊடகங்களில் உதவி கேட்டார். “எனக்கு உத்திர பிரதேசம், ஃபாருகாபாத், கயம்கஞ்ச் பிளாக்கில் அவசர உதவி தேவை. ஒரு படுக்கையுடன் கூடிய வென்டிலேட்டர் வேண்டும், என் சகோதரர் இறந்து கொண்டிருக்கிறார்.. தயவு செய்து உதவி செய்யவும். நாங்கள் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறோம்” என ட்வீட் செய்திருந்தார்.

அந்த பதிவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து தனது சகோதரர் உயிருடன் இல்லை என்பதை பகிர்ந்துக் கொண்டார் பியா.