‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு உரிய நட்சத்திர பலன்கள்! வேதாகோபாலன்

ளங்கள் அளிக்கப்போகும் தமிழ் புது வருடமாகிய  பிலவ ஆண்டின் சித்திரை 1ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 14ம் தேதி, புதன்கிழமை, சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. தமிழ் ஆண்டு வரிசைப்படி,  அட்டவணையில் 35 வதாக வரக் கூடிய பிலவ வருடம் இதோ வந்துகிட்டிருக்குங்க.

பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

பொதுப்பலன்கள்:

இந்தப் புது வருடம், மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரனின் நட்சத்திரம். எனவே பெண்களுக்கு சந்தோஷத்தையும் மனநிறைவும் முன்னேற்றமும் தரும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையும்.. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைக்குக் காத்திருப்போருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அனேகமாக அது பெண் குழந்தையாக இருக்கலாம். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கவும் குழந்தைப் பேறு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாண்டு பரணி நட்சத்திரத்தில் பிறப்பதால் மக்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். உணவுத் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்குச் சந்தை சிறந்த லாபம் தரும். கட்டுமானத் தொழிலும் மருத்துவத் தொழிலும் வளர்ச்சியடையும்.

வாகனம் தொடர்பான பிசினஸ் உள்பட, .பிசினஸ் செய்துக்கிட்டிருக்கறவங்க, உற்பத்தி தொடர்பான பிசினஸ் செய்துக்கிட்டிருக்கறவங்க அனைவருக்கும் வளர்ச்சி ஏற்படும். கூடுதல் லாபமும் கிடைக்கும்

அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு மிதமான முன்னேற்றம் இருக்கும். சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன் உண்டு. ஸ்டூடன்ட்ஸ் சற்றுஅதிக கவனமுடன் படித்தால் வெல்ல முடியும். அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும்.

சிம்மம் (மகம்)

பொதுவாக இந்தப்  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை. இதுவரை பல தடைகளையும், தாமதங்களையும் சந்தித்து வந்த நீங்கள் அதில் இருந்து மெல்ல மீண்டு வர போகிறீர்கள். வருகின்ற புதிய ஆண்டு மிகவும் உற்சாகமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். வாழ்க்கை பற்றிய தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் நல்ல பல மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நீங்கள் திட்டமிட்டபடி பல வேலைகளைச் செய்து முடித்து வெற்றி காண்பீங்க.  இந்த ஆண்டு உங்களின் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து மீளுவீங்க. எதையும் சுலபமாக வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை முதல் முறையாக வரும்.

பொருளாதார வாழ்க்கையைப் பொருத்தவரை, இந்த ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். உங்க வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும், இது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். ஆரம்பத்தில், பொருளாதார விஷயங்களில் பலவீனம் இருக்கும். இருப்பினும், உங்க நிதி வாழ்க்கையை மேம்படுத்த உங்க கடின உழைப்பு உதவுவதால் முன்னேற்றத்தைக் காண்பீங்க. பெரிய சொத்து போன்ற விஷயங்களுக்காகச் செலவு செய்வது பற்றி நன்கு யோசித்து முடிவெடுங்கள். பிற்பாடு மாதா மாதம் அதற்கான தவணைத் தொகையைக் கட்ட வேண்டிவரும்போது சமாளிக்க முடியுமா என்று யோசியுங்கள்.

குடும்பத்தில் சந்தோஷமில்லாத நிலை இல்லாமல் இருந்தது. குடும்ப ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் அந்தப்பார்வை சந்தோஷத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும். குடும்ப சம்பந்தமான பிரச்னை எதையும் தைரியமாக எதிர்கொள்வீங்க. அதனால் பிரச்னைகள் தீர்ந்து, குறைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.  முன்பைவிட இப்போதேல்லாம் நீங்களும் குடும்ப உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். இதனால் புரிதல் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்காக அதிக நேரம் செலவழித்து அவர்களின் அன்பைப் பெறுவீங்க.  

சரும பிரச்னைகளை உடனுக்குடன் கவனித்துவிடுவது நல்லது. அலைச்சலைக் குறைத்துக்கொண்டால் உடல் நிலை பற்றிய கவலை  இல்லை. சரியான நேரத்துக்குச் சாப்பிட்டுச் சரியான நேரத்துக்குத் தூங்குங்க போதும். ஹெல்த் சூப்பராயிருக்கும்.

 சிம்மம் (பூரம்)

பொதுவாக வாழ்வில் முன்னோக்கிச் செல்வீங்க. வம்பு வழக்குகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழந்த சொத்துக்களை திரும்ப பெறும் வாய்ப்பு உண்டு. கடன் பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். புது வீடு கட்டி அல்லது வீடு வாங்கிக் அதில் குடி ஏறுவீங்க. பணியிடத்தில் இருந்த மந்த நிலை மாறும்.  நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். பிசினஸ், வியாபாரம் சீராக நடைபெறும். தன்னம்பிக்கையோடு உங்க செயல்களை செய்ய தொடங்குவீங்க. வெளியூரில் வசிப்பவர்கள் சந்தோஷப் பயணமாக சொந்த ஊர் வருவாங்க. எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீங்க.

வரவேண்டிய பணத்தை அழகாகவும் மென்மையாகவும் பேசி வசூல் செய்வீங்க. பிசினஸ் கை கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல தன லாபம் கிடைக்கும். அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். தீயபழக்கங்கள் காரணமாகப் பணத்தை எங்கும் கோட்டைவிடாமல் இருக்கப்பாருங்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் உங்களின் சேமிப்பு மட்டுமின்றிக் குடும்பத்தினரின் சேமிப்பும் அதிகரிக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் வருமானமும் லாபமும் வரும். ஒரு வேலையில் இருந்துகொண்டே இரண்டாவது பிசினஸ் செய்வீங்க. குளிர் தேசங்களில் உள்ள குடும்ப உறுப்பினரிடமிருந்து பணம் வரும். கலைத்துறையில் இன்டரஸ்ட் ஏற்பட்டுக் கூடுதல் வருமானம் வரும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கு பெறுவீங்க. மகன் அல்லது மகளுக்கு திருமண யோகம் கை கூடி வரும். கணவர்/ மனைவி வழி உறவினர்  மூலம் மகிழ்ச்சி  உண்டாகும். குடும்ப விசேஷம் ஒன்றில் எதிர்பாராத நபர்களின் உதவிகள் கிடைக்கும். தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். ஆனால் அது வந்த வேகத்தில் மறையும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும்.பெண்கள் சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவர். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.

 சிம்மம் (உத்திரம்,1 ம் பாதம் )

பொதுவாக உங்களது செயல்கள் வேகமாகஇருக்கும், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவீங்க. உங்களது இயற்கை குணமான படபடப்பு, அவசரம், ஆகியவற்றை ஓரங்கட்டி வைத்துவிட்டு இந்த ஆண்டு நிதானப்போக்குடன் செயல்படுவீங்க.. எடுத்த வேலையை முடிக்கும் வரை உங்களது கவனம் சிதறாமல் இருப்பது அதிக நன்மைகளை அளிக்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீங்க. தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீங்க. குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீங்க. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

பொதுவாக இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். உண்மையான உழைப்பிற்கு எந்த வகையிலும் இடையூறு நேராது. அயராத உழைப்பினால் அசாத்தியமான வெற்றியைக் காண்பீங்க./ வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீங்க. பொருள் சேர்க்கை ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். முன்பிருந்த அதே நிலைதான் பணியாளர்களுக்கு இருக்கும் என்றாலும் போனஸ் போன்ற இனங்களில் ஒரே வருமானமாக இந்த வருடம் ஒரு நல்ல தொகை வரும். வழக்கமான சம்பளம் போன்றவைகூட சிறு தாமதத்துக்குப் பின் ஓரிருமுறை வரும். மற்றபடி பயப்படும் அளவு எந்த நிதிப்பற்றாக்குறையும் இருக்காது. சேமிக்குப் பழக்கம் உள்ளவர்களுக்கு இன்னும் நல்ல ஆண்டு இது.

தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிறைய நடைபெறும். உடன்பிறந்தவர்களால் ஒற்றுமை பலப்படும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். தாய் மற்றும் சகோதரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். தாய் வீட்டில் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்க வரவேற்பு கிடைக்கும். அண்ணன் தம்பியால் உங்களின் கௌரவம் உயரும்.

கன்னி (உத்திரம்,2,3,4 ம் பாதம்)

பொதுவாக குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீரும். பல மாதங்கள் தட்டிப்போன குலதெய்வ வழிபாட்டினை இந்த ஆண்டு நல்லபடியாக முடிப்பீங்க. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண் வம்பு பிரச்னைகள் விலகும். முக்கியமாக இவ்வருடத்தில் குடும்பத்தினர்களின் வெற்றியில் உங்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தைவிடவும் உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை உணர்வீங்க. உண்மையான உழைப்பிற்கு எந்த வகையிலும் இடையூறு நேராது. அயராத உழைப்பினால் அசாத்தியமான வெற்றியைக் காண்பீங்க.. குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். ஆயினும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீங்க.

ஒரு சிலர் தந்தை வழி சொத்துக்களை விற்று, அதன் மூலம் வரும் தன லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவுசெய்ய முயற்சிப்பீங்க. அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெல்வீங்க.. சொத்து வாங்க முன் பணம் தருவீங்க. தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. பணமாய் இருந்தது வேறு வகையில் சேமிப்பாய் மாறும் என்பதால் அவற்றை செலவாக நினைக்க வேண்டாம். எந்தக் காலத்திலோ உங்க முன்னோர் வைத்துவிட்டுப்போன செல்வங்கள் உங்களுக்கு உதவும். ஷேர் போன்றவற்றில் நீங்கள் செய்த முதலீடுகள் இப்போது நல்ல லாபம் அளிக்கும்.

குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்து வரும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பாங்க. நண்பர்களின் துணையோடு எவராலும் எளிதாகச் செய்ய முடியாத ஒரு சில சாதனைகளை செய்து முடிப்பீங்க. பேசுவதற்குத் தயங்கும் உங்களுக்கு இவ்வருடத்தில் முறையாய்ப் பேசும் கலை கைவரப்பெறுவீங்க. தன்னம்பிக்கை கூடுவதால் குடும்பத்தில் ஏற்படும் சிறு பூசல்களை ஒரே குரலில் அடக்கி வெற்றி காண்பீங்க. இதன் காரணமாக உங்க மீது உள்ள மதிப்பு கூடும். குழந்தைகள் உங்களை பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்து சந்தோஷப்படுவாங்க.

கன்னி (ஹஸ்தம்) 

பொதுவாக சற்று நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் கிட்டினாலும், ராசி அதிபதி புதனும், நட்சத்திர அதிபதி சந்திரனும், அடிக்கடி நன்மை தரும் அமைப்புக்கு வருவாங்க என்பதால், நன்மை அதிகமாக உண்டு. சனி உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்க போக்கில் சற்ற நிதானப்போக்கு இருக்கும். புண்ணிய பலன்களைப் பெறுவீங்க. ராகு உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் நீங்கள் ஆன்மிக இன்டரஸ்ட் கொண்டாலும் வியப்பதற்கில்லை.

நிதி நிலைமை அருமையாக இருக்கும். மேமாதத்துக்குப் பிறகு சற்று முயன்று சம்பாதிக்க வேண்டியிருந்தாலும், அறிவாற்றலுடன் முதலீடுகள் செய்வீங்க. உடனடிப் பலன் சாதாரணமாகத் தோன்றினாலும் சிறிதுகாலத்தில் அபரிமித நன்மைகள் உண்டு. லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து இருக்கும். இந்த வருடம் குருவும் சனியும் இணைந்து பதினொன்றாம் வீட்டைப் பார்ப்பதால் வருட ஆரம்பத்திலிஇருந்தே நிதியில் நிரந்தரத்தன்மை இருக்கும். ஒன்பதில் ராகு. வெளிநாட்டு ஆதாயம் கிட்டும். நீங்கள் பல வெளிநாடுகள் செல்லும் வாய்ப்பும் உள்ளது. பாட்டன் வழிச் சொத்து வரும். பலவித வருமானங்கள் வருடக்கடைசியில் கிடைக்கும். பணப் பை நிரம்பும்.

பெரும்பாலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சலசலப்புகள் இருந்தாலும் உங்க ஜாலியான போக்கால் சரிக்கட்டிவிடுவீங்க. மகன், மகளின் எதிர்காலத்திற்கான நிரந்தர ஏற்பாடு ஒன்று செய்வீங்க. தந்தையுடனான உறவு உங்க போக்கிற்கேற்ப இருக்கும். குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். குடும்ப உறவுகள் ஆரம்ப மாதங்களில் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு அனுசரிக்க வேண்டியிருக்கும். மகிழ்ச்சியுடன் சுற்றுலாக்கள் செல்வீங்க. குடும்பத்தில் உள்ள எதிர்பாலினத்தினர் மதிப்பர். உங்க சாதனைகளை  அவர்கள் பாராட்டுவர்

பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியில் முன்னேற்றத்தைப் பெற விரும்புபவர்கள் வேலைக்கேற்ற தொரு கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வதும் அல்லது உயர் படிப்பு படிப்பது சிறந்தது. துறை சம்பந்தமான உங்களின் கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ளுங்கள். மேலதிகாரியிடமிருந்து ஆர்வத்துடன் நிறையக் கற்பீங்க. சிறு தடை தாமதங்கள் இருந்தாலும் அடுத்த நிலைக்கு உயர்வீங்க. மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியில் உள்ளவர்கள் பேச்சைக்கொண்டு முன்னேறுவீங்க.

கன்னி (சித்திரை, 1,2 ம் பாதம்)

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய தனித்துவம் வெளிப்படும் வகையில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவீங்க.  மென்மையும் கருணையும் அதிகரிக்கும். வழக்கமான புத்திசாலித்தனம் காரணமாகச் சிறப்படைவீங்க.

கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது கவர்ன்மென்ட்த் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் இருந்தால் ஏமாற்றப்படும் வாய்ப்பு இல்லை. கவனத்துடன் இருக்கணுங்க. அதே போல கவர்ன்மென்ட்த் தரப்பிலிருந்து எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன்கள் போன்றவை வந்து சேரும். பொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். குருபார்வை காரணமாக நிமி தேடி வரும்.

உயர்கல்வி, பணி போன்ற நற்காரணங்களின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிவாங்க. தாய்மாமன் உங்களுக்காகவும் உங்க குழந்தைகளுக்காகவும் செலவுகள் செய்வாங்க. முன்பிருந்த சின்னசின்ன மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்துடன் கோயிலுக்குப் போவீங்க. .

கல்வியில் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறப்போகிறீர்கள். குருபார்வை உதவும்.  ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துபவர்கள் அற்புதப் பலன்களை அடைவர்.  நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பரஸ்பரம் உதவுவீங்க.

காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீங்க. சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் சாமர்த்தியமாக நழுவுவதுடன் தீயவர்களை உணரச் செய்து தண்டிப்பீங்க.

வழக்கம்போலச் சின்னஞ்சிறு உபாதைகள் இருந்தாலும் உடனுக்குடன் அது உங்களைவிட்டுக்கிளம்பிவிடும். உங்க ராசிக்காரர்களுக்கு எப்போதும் ஹெல்த் சற்று அதிகம்.இந்த ஆண்டு அது மிக அதிகம்.

தொழிலில் பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாள்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீங்க என்பதால் கவலை இல்லை. பங்குதாரர்களால் நன்மை வரும். ரியல் எஸ்டேட், கமிசன், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீங்க..

தேவையற்ற ஆபத்தான சுற்றுப்பயணங்கள் மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தியானம் மற்றும் லேசான உடல் பயிற்சிகளும் அவசியம். உணவு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். உணவுதான் உடல்நிலைக்கு அவசியம் என்பதை உணருங்கள்.  குறித்த நேரத்தில் சாப்பிடுவதும் நேரம் தப்பாமல் தூங்குவதும் முக்கியம் என்பதை நினைவில் கொண்டால் போதும்.

துலாம் (சித்திரை, 3,4 ம் பாதம்)

பொதுவாக வருமானம் உயரும்.. கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீங்க. மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். சகோதர உறவுகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீங்க. நிதி சம்பந்தமான வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். குறைந்த சிரமத்துடன் நிறைந்த வருமானத்துக்கு நேர்மையான யுக்திகளைக் கண்டறிவீங்க. உங்க உழைப்பைப் பார்த்து நிர்வாகம் வழக்கத்தைவிட நல்ல சம்பள உயர்வு தரும். சிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பு உயரும்.

மகளின்/ மகன் கல்யாணத்திற்காக வரன் தேடியவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன்/ மணமகள் அமைவார். குடும்பத்தினருக்குப் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.  சகோதரிக்கு நல்ல வேலை அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். உறவினருடன் பழைய ‘சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீங்க

தீய பழக்கம் இல்லாதவரையில் வெல்வீங்க. கல்வி தவிரவும் கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பிரைஸ், பாராட்டுகளை பெறுவீங்க. உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து, பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்து நீங்களும் மகிழ்வீங்க.

உற்சாகத்துடன் காணப்படுவீங்க. தோழிகளுக்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடந்து உங்களுக்கு மகிழ்ச்சி தரும். வெளிநாட்டில் உள்ள உறவினரிடமிருந்த சந்தோஷச் செய்திகள் வரும்.  தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

தீய பழக்கங்கம் இருப்போர் அதைக் கைவிட்டு ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவைச் சாப்பிடுவோருக்குத் தொல்லை இல்லை. சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

பணி முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீங்க. கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீங்க. சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள்.. கனமான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றுவீங்க.

பணியில் உங்களுக்கான வேலையை சரியான நேரத்தில்  முடிக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். . பணியில் நீங்கள் செலுத்தும் இன்டரஸ்ட் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அது எதிர்கால நன்மைக்கும் வழிவகுக்கும். பணியிடத்தில் உங்க வேலையை அவசரப்படாமல் ஒரு முறைக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.

துலாம் (சுவாதி)

பொதுவாக அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீங்க. குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீங்க.திருமணத்துக்குக் காத்திருந்தவர்களுக்குக் கண்ணுக்கு அழகான வாழ்க்கைத் துணை வந்தமைவார்.

உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீங்க. திடீர் லாபம்,பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். சேமிப்பு தக்க  சமயத்தில் பயன்படும். செலவு ஏற்பட்டாலும் அது நல்ல செலவாகவே இருக்கும். ஒரே வகையான சேமிப்பாக இல்லாமல் பல வகைகளில் சேமிப்பீங்க.

வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியல் பிரபலங்கள் அறிமுகமாவாங்க. மகனுக்கு/ மகளுக்கு நல்ல குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும்.

ஏற்கனவே தட்டிப்போயிருந்த வெளிநாட்டு வாய்ப்பு, சுலபமாகக் கிடைக்கும். கணவர் அல்லது மனைவி உங்க கல்விக்கு மிக உதவுவார். ஒரே சமயத்தில் இரண்டு வகை விஷயங்களை எடுத்துக் கற்பீங்க. நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியரின் பாராட்டுப் பெறுவீங்க.

தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீங்க. மன நிலையில் குறுகல் இல்லாத ஆரோக்யமான போக்கு இருக்கும். பக்தி அதிகரித்து நிம்மதி கூடும்.

பொதுவாக ஹெல்த் நல்லமுறையில் இருக்கும். சருமம் சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராதபடி முன்கூட்டியே பாதுகாப்பாக இருங்கள். உணவு விஷமாகாதபடி கவனமாக உண்ணுங்கள். பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளது.

உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதை உண்டாவதோடு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணி இடம் மாற்றம் உள்ளிட்ட இடமாற்றங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.இதுவரை வேலையில் இருந்த சுணக்கம் நீங்கிப் புத்துணர்ச்சி பிறக்கும். சக பணியாளர்கள் உதவியாக இருப்பாங்க.

பிசினஸ் மற்றும் பணி பற்றிய உங்க செயல்பாடு நேர்மறையாக இருக்கும். அனைத்து விஷயங்களும் உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். சிலருக்குச்  சம்பள உயர்வு, பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

டீச்சர்ஸ் உங்களுக்குத் துணைபுரிவாங்க. குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு இருக்கும். நீங்கள் நினைத்த இலக்கை அடைவீங்க.

துலாம் (விசாகம் 1,2,3 ம் பாதம்)

சென்ற ஆண்டில் செய்ய நினைத்து தடைபட்ட காரியங்களை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே செய்து முடித்துவிட வேண்டும் என்ற உற்சாகத்தில் செயல்களில் அசாத்திய வேகம் இருக்கும். எதையும் தள்ளிப்போடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீங்க.

சம்பாதிக்கவும் சேமிக்கவும் சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட வருமானங்கள் அதிகரிக்கும். இந்த வருடம் நிச்சயம் பற்றாக்குறை ஏற்படாது. யாருடனும் உங்களை ஒப்பிட்டுத் தயங்கி நிற்காமல் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நிதியைப்  பெருக்குவீங்க. நேர்மையற்ற வழிகளைத் தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் இணைவர். சுப நிகழ்வுகள் நடக்கும். பிசினஸ் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

சக மாணவர்களுடன் மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. சில நல்ல நண்பர்களின் உதவியால் மேற்படிப்பு பற்றிப் புதிய கோணத்தில் சிந்திப்பீங்க. எடுத்த முயற்சிகள் சற்றுத் தாமதமானாலும் நற்பலன் அளிக்கும்.

எதையும் நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் சற்று படபடப்பு அதிகம் இருந்தாலும் தைரியலக்ஷ்மி துணை இருப்பதால் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்..வீட்டிலும் பணியிலும் பாராட்டு வரும்.

தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்வதில் நீங்கள் இந்த ஆண்டு சற்று அதிகக் கவனம் செலுத்துவீங்க. ஆரோக்ய விஷயத்தில் ஒரு சிறிதளவு கவனக்குறைவும் கூடாது என்பதை நினைவில் கொள்வது நல்லது.

பணியில் இருப்பவர்களின்  செயல்களில் மேலதிகாரிகள் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. முக்கியக் ஃபைல்ஸ்ஸைக் கையாளும் போது கவனமாக இருந்தால் கவலையில்லை. புது வாய்ப்புகளை யோசித்து       அனுபவசாலிகளின் ஆலோசனையுடன் ஏற்கலாம். இடமாற்றம் இருக்கும்.

உங்களால் முன்னேற முடியாதோ என்ற வீண் பயம் இருந்துகொண்டிருக்கும். அது இனி வேண்டாம். நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

காதலில் இனிமையான அனுபவங்களைப் பெற முடியும். திருமணத்திற்கு உறவினர்களிடம் பேசுவதற்கு சரியான தருணத்தைத் தெரிவு செய்வது அவசியம். திருமணத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

விருச்சிகம் (விசாகம்,4 ம் பாதம்)

இத்தனை காலம் முன்னேற்றத்துக்கு நிலவி வந்த தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  உடல் நலம் நிம்மதி அளிக்கும்.  திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீங்க. ஆலயத்  திருப்பணியில் சிறு பங்களிப்பு செய்வீங்க.

உபரி வேலைகளிலும் ஈடுபட்டு வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் மிக உற்சாகமாக ஈடுபடுவீங்க.வெளிநாட்டுப் பணம் வரும். தடைகள் ஏற்பட்டுப் பிறகே நிதி விஷயங்கள் சுலபமாக முடியும் தங்கத்தை வாங்கி அந்த வகையில் சேமிப்பீங்க.  ஷேர் மார்க்கெட்டில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம். சூதாட்டம் அறவே கூடாது.

தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தராதபடி அதைப் புதுப்பிப்பீங்க. இதனால் குடும்பத்தோடு குதூகலமாக வெளியில் போய் அவர்களை சந்தோஷப்படுத்தி நீங்களும் மகிழ்வீங்க.

சற்று அதிகம் உழைத்தே எதையும் சாதிக்க முடியும். ஆனால் சாதனை இனிக்கும். எதையும் முனைந்து கற்று மனதில் ஏற்றிக்கொள்வீங்க. வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். கவனச்சிதறல் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு பொற்காலம்.

குடும்பத்தில் நிலவி வரும் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவர் மிகுந்த உதவியாய் இருப்பார். ஆயினும் அவ்வப்போது அவருடன் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டாம். பிள்ளைகளுக்காக சேமிப்பில் ஈடுபட்டு மகிழ்வீங்க.

மன அமைதியும் ஆரோக்ய உணவும் உடல் நலத்தை நன்கு பேண உதவும் என்பதை மறக்க வேண்டாம் பணிச்சுமை காரணமாக அதிகம் உழைக்க வேண்டி வந்து அதனால் ஹெல்த் கெடாமல் பார்த்துககொள்ளுங்கள்.

ஆண்டின் முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பாங்க. பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நிபுணர்களிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும், போட்டி தேர்வில் வெல்ல வாய்ப்புள்ளது. ஆண்டின் முதல் பாதியில் சற்று அலட்சியப்போக்கு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். வருடத்தின் பிற்பாதியில் திடீர் முனைப்பு வந்து எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்ணுடன் வெற்றியடைவீங்க.

விருச்சிகம் (அனுஷம்)

உங்க ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வாங்க. அனுபவப் பூர்வமாகவும், யதார்த்தமாகவும் பேசுவீங்க. தடைபட்ட பல விஷயங்களை முடித்துக்காட்டி வியக்கச் செய்வீங்க. குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள்,நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீங்க

எதிர்பார்த்த வகையில், தேவைக்குமேல் பணம் வரும். இத்தனை காலம் வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். உங்களுக்கென்று தனியானதொரு சேமிப்பை ஏற்படுத்திக்கொள்ளும் எண்ணம் வரும். அதை ஆரம்பிப்பீங்க. எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என்று குடும்பத்தினரோடு கலந்து பேசி முடிவெடுப்பீங்க.

கணவன் மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீங்க. வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீங்க. உங்களின் பொறுப்பான செயல்களினால் குடும்பத்து பெரியவர்களிடம் நற்பெயரினை அடைவீங்க.

வெற்றி பெறும் வழிகளை ஆராய்ந்து அவற்றைக் குறித்துக்கொண்டு அதன்படி செயல்படுவீங்க. படிப்பில் முன்னேறுவீங்க. விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீங்க. பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வாங்க. நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கணுங்க.

எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப ஒற்றுமையைப் பேணுங்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீங்க. குடும்பத்தில் நிம்மதி கூடுதலாகும்.

உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். இதனால் மேலும் நலமடைவீங்க. மாற்று மருத்துவத்தின்மீது நாட்டம் வரும். மருந்துகள் உட்கொள்ளாமல் ஆரோக்யமான வழிகளிலேயே நன்மையடைவீங்க.

சம்பள பாக்கியை போராடாமலேயே பெறுவீங்க. எதிர்பார்த்த சலுகைகள் அனேகமாக உடனடியாய்க் கிடைக்கும். கணினி துறையினர்களே! புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.. பணியாளர்களுக்கு திடீர் நன்மை ஒன்று உண்டு.

திருமணமான பெண்கள் சிலருக்கு இதுவரை அடைந்த மனக் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து இந்த ஆண்டு ஆறுதலை தரும்.

மாற்று வகை மருத்துவம் மேற்கொண்டு பல காலமாய்த் தொல்லை கொடுத்து வந்த நோய்கள் அகலும்.  உடல் நிலை பற்றி மனதில் ஏற்பட்டிருந்த கவலை  மறையும். சருமம் சம்பந்தமாய் நோய்களிலிருந்து முற்றிலும் விடுபடுவீங்க

உணவுப் பழக்கம் காரணமாக சிறு தொல்லைகள் ஏற்பட்டு சில நாட்களிலேயே சரியாகும்.

விருச்சிகம் (கேட்டை)

மனஇறுக்கங்கள் மெல்லக்குறைந்து பிறகு, நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் மூலம் நீங்கள் விரும்பிய செயலை முடிப்பீங்க. மகனுக்கு இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். நீங்கள் ஏங்கிய நன்மைகள் கைகூடும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாதபடி வேலை பளு அழுத்தும்.

எவ்வளவுதான் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மோசமாக நிலை கிடையாது. வெளிநாட்டு விவகாரங்களில் நிலவி வந்த டென்ஷன்கள் தீரும். நிதி பற்றிய திட்டங்கள் நிறைவேறும்.  வேறு பணிக்கு மாறுவதன் மூலம் சம்பளம் அதிகரிக்கும். கடன் கேட்ட இடத்தில் கிடைக்கும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்துப் பிறகு செய்யலாம்.

அக்கம்பக்கத்து வீட்டு பிரச்னைகளைத் தீர்த்து சுமுகமான பஞ்சாயத்து செய்வதால் உங்களைப் பலருக்குப் பிடிக்கும். உறவினருடனும் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட அவகாசம் கிடைக்காது. குடும்ப நபர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீங்க.

ஸ்டூடன்ட்ஸ் கல்வி நிலையில் ஏற்றம் பெறும் வருடம் இது. கடந்த காலத்தில் உண்டான ஞாபக மறதி காணாமல் போவதோடு நினைவாற்றலும் கூடும். பாடத்தினை நிதானமாக உள்வாங்கி படித்து  வெற்றி பெற்று மகிழ்வீங்க. ஆசிரியர் பெருமிதம் அடைவார்.

பொழுதுபோக சுற்றுலா சென்று வருவீங்க.எண்ணங்கள் புதுமைகளாக மலரும்.குடத்தில் இட்ட விளக்காக செயலாற்றி வந்தவர்கள் இந்த ஆண்டு பிரகாசிப்பீங்க. வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும்.

கடந்த ஆண்டைவிட மேம்படும்.  ஆரோக்யத்தில் நல்ல முறையில் கவனம் செலுத்துகிறீர்கள்தான். நேரத்துக்குச் சாப்பிடவும் தூங்கவும் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் பிரச்னை இருக்காது.

கடந்த ஆண்டு பிசினஸ் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறி சூடுபிடிக்கும். பணவரவு நல்லா இருக்கும்.  துவக்கம் உங்களுக்கு சுமாராக இருக்கிறது என்றாலும் போகப்போக நல்ல முன்னேற்றத்தினைக் காண்பீங்க. சோதனைகளை எல்லாம் உங்க சாதுர்யத்தாலும் யுக்தியாலும் சாதனைகளாக மாற்றிக்கொள்வீங்க.

பணியிடத்தில் புது நண்பர் யாருக்கும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படிப் பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் அழகாகச சமாளிப்பீங்க. லாபம் உண்டு. உணவு, இரும்பு, கட்டட பொருள்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீங்க.

நாளை தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள் வெளியாகும்…

‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கு உரிய நட்சத்திர பலன்கள்! வேதாகோபாலன்