கல்லூரி மாணவர்களுக்கு புத்தகத்தை பரிசளிக்கும் பில்கேட்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த 4மில்லியன் மாணவர்களுக்கு புத்தகத்தை அன்பளிப்பாக பில்கேட்ஸ் வழங்கியுள்ளார். மேலும், இந்த ஆண்டு கோடையில் கல்லூரி முடித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு உண்மை நிலையை விவரிக்கும் ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் எழுதிய ஃபாக்ட்புல்னஸ் புத்தகம் வழங்கப்படும் என்று உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.
bill
இந்த உலகம் மிகவும் மோசமானது, ஆனால் நமது எண்ணங்கள் அதை நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றக்கூடியது என்று ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். வாழ்க்கையின் தத்துவத்தை விவரிக்கும் இந்த புத்தகத்தை ஒவ்வொரு பட்டதாரி இளைஞர்களுக்கு அளிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”எங்கள் இணையதளத்தை பயன்படுத்தி ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் எழுதிய ஃபாக்ட்புல்னஸ் புத்தகத்தை 4 மில்லியன் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நான் இதுவரை படித்த புத்தங்களில் ஃபாக்ட்புல்னஸ் மிக முக்கியமான ஒரு புத்தகம் – உலகத்தை பற்றி சிந்திக்க ஒரு தவிர்க்க முடியாத வழிகாட்டியாக இந்த புத்தகம் உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் அமெரிக்காவின் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் போது எனது அன்பளிப்பாக இந்த புத்தகம் வழங்கப்படும், இந்த புத்தகம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. கல்லூரி படிப்பை முடித்து விட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் மாணவர்களாகிய உங்களுக்கு ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் எழுதிய புத்தகம் மிகவும் உதவும்” என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்

உலகில் உள்ள அனைத்தும் மோசமானது, ஆனால் நமது எண்ணங்கள் மூலம் அவற்றை நன்மையாகவும், தவறானதாகவும் மாற்ற முடியும். போர், வன்முறை, இயற்கை பேரிடர், ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நாம் முயன்றால் மாற்றலாம். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே உள்ளனர். ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர்” என்று ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் ”மன அழுத்தம், தவறான வழிமுறைகள் குறித்து உலக கண்னோட்டத்தில் பார்க்க நான் அழைப்பு விடுத்துள்ளேன். படிப்படியாக ஆண்டுதோறும் இந்த உலகம் மாறும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகம் பெரும் சவால்களை எதிர்க்கொண்டாலும் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம் “ என்றும் ஹான்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நம் வாழ்வின் நிலையை துள்ளியமாக விளக்கிய ஹான்ஸ் ஃபேக்ட்புல்னஸ் புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கும் போதே கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்தார். இதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் மருமகள் இணைந்து இந்த புத்தகத்தை எழுதி முடித்து வெளியிட்டனர். புத்தகம் வெளியான சில நாட்களிலேயே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அதிகளவில் பேசப்பட்டது.