ராகுல் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதற்கு விமானிகளே காரணம்….விசாரணை குழு அறிக்கை

மும்பை:

கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது கடந்த ஏப்ரல் மாதம் பரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஹூப்ளி சென்றார். அவர் சென்ற விமானத்தில் மேலும் 4 பேர் இருந்தனர்.

டில்லியில் இருந்து 2 மணி நேரத்தில் ஹூப்ளியை அடைந்த விமானம் ஹூப்ளியில் தரையிறங்க முடியாமல் போனது. 3வது முயற்சியில் தான் விமானம் தரையிறங்கியது. இதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் கட்சி சந்தேகித்தை எழுப்பியது.

மேலும், விமானம் நிலை தடுமாறி. ஒரு பக்கமாக சாய்ந்தது. தாழ்வாக பறந்து மோதுவது போல் விமானம் சென்றது. பின்னர், ஒருவழியாக விமானத்தை விமானி தரை இறக்கினார். இது குறித்து போலீசில் ராகுலின் உதவியாளர் புகார் அளித்தார். கர்நாடக டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதினார். இது குறித்து விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.

இதற்காக அமைக்கப்பட்ட 2 பேர் கொண்ட குழு இன்று வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில்,‘‘விபத்துக்குள் சிக்கும் வரையில் விமானம் சென்றதற்கு விமானிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “விமானத்தில் முன்கூட்டியே எந்த கோளாறும் இல்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறிது தாமதம் ஆகிவிட்டது. இதற்கு விமானிகளே காரணம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.