கேரளா பேரழிவுக்கு பினராய் விஜயன் அரசு தான் காரணம்….சுப்ரமணியன் சுவாமி

டில்லி:

கேரள வெள்ளம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறுகையில்,‘‘பினராயி விஜயன் தலைமையிலான அரசு முறையான முன்னெச்சரிக்கை திட்டங்களை உருவாக்காததே பேரழிவிற்கு காரணம். இப்பேரழிவு மனிதன் உருவாக்கிய தான். முந்தைய ஆட்சிகாலத்தில் காங்கிரஸ் அரசு பணத்தை சுருட்டுவதில் தான் ஆர்வம் காட்டியது. அதே போல தற்போதுள்ள அரசாங்கமும் வெறும் சொல்லாட்சியே செய்து வருகிறது.

போர் அல்லது நிலநடுக்கத்தின் பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை திட்டம் இல்லாமல் நம்மால் ஒருங்கமைக்கப்பட்ட சமுதாயத்தை உருவாக்க முடியாது. நம் சமூகம் எவ்வளவு வலிமையானது என்பது பேரழிவுக்கு பிறகு நாடு மீள்வதிலிருந்து தான் காட்டும். மாநில அரசின் மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக கேரளா உருக்குலைந்துள்ளது. பாலங்கள் இடிந்து விட்டன. கேரளாவில் நிகழ்ந்துள்ள இவ்வளவு பெரிய மோசமான பேரழிவை இதுவரை நான் உலகில் கண்டதில்லை. ஒன்றுக்கும் உதவாத கேரளா அரசை போல் எந்த அரசையும் பார்த்தது கிடையாது’’ என்றார்.