டில்லியில் எம்.பி.க்களுடன் பினராய் விஜயன் திடீர் போராட்டம்

டில்லி:

கேரளா மாநிலம் பாலக்காட்டில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க 2008&09ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 250 ஏக்கர் நிலைத்தையும் மாநில அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையை ஹரியானாவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், எம்.பி.க்கள் டில்லி ரெயில்வே தலைமை அலுவலகம் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பினராயி விஜயன் பேசுகையில், ‘‘கேரளாவில் ஓடும் ரெயில்களின் பெட்டிகள் மிகவும் பழமையானது.

அவை ஓடும்போது எந்த சத்தம் வருகிறது. அதனால் பாலக்காட்டில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பது அவசியம்.. ஆனால் தற்போது இந்த தொழிற்சாலையை ஹரியானாவில் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கேரளாவில் இடது சாரிகளின் ஆட்சி நடப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது’’ என்றார்.