திருவனந்தபுரம்

ந்துஅமைப்பான ஆர் எஸ் எஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகியவைகள் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சி நடத்துவதாக கேரள முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இந்து அமைப்பான ஆர் எஸ் எஸ் தொண்டர்களிடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டு வருவது தெரிந்ததே.    கேரளாவில் இந்துக்கள் அமைப்பான ஆர் எஸ் எஸ் போலவே இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (POPULAR FRONG OF INDIA) என்னும் அமைப்பும் பிரபலமாக உள்ளது.

நேற்று செய்து நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் இந்து அமைப்பான ஆர் எஸ் எஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்பான பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சிகள் நடத்துகின்றன.    ஆர் எஸ் எஸ் அமைப்புகள் தேவஸ்தான போர்டுகளின் கீழ் வரும் கோவில்களின் உள்ளேயே தங்களின் உடற்பயிர்சி முகாம்களை நிகழ்த்தி வருகிறது.

இந்த அரசு இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறது.   இது போல சட்ட விரோத ஆயுதப் பயிற்சி,  உடற்பயிற்சி முகாம் ஆகியவைகளை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்க தயங்காது.   தேவைப்பட்டால் இது போன்ற சட்ட விரோத செயல்களை செய்யும் இயக்கங்களை இந்த அரசு தடை செய்ய தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் கூறியதை யோகா குரு ராம்தேவ் மறுத்துள்ளார்.  அவர், “ஆர் எஸ் எஸ் என்பது தீவிரவாதக் குழு அல்ல.   அது ஒரு தேசிய அமைப்பு.  ஆர் எஸ் எஸ் என்றும் நாட்டுக்கு எதிரன செயல்களில் ஈடுபடாது”  என தெரிவித்துள்ளார்.