திருவனந்தபுரம்,

மொழி பேதமின்றி மீனவர்களுக்கு உதவுவோம் என்று தமிழக மீனவர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளா

சமீபத்தில் ஓகி புயலால் கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் பலரை கேரள அரசு காப்பாற்றியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை மீனவ குடும்பத்தினர் சந்தித்தனர்.

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, குமரி மாவட்டச் செயலாளர் முருகேசன், குமரி முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லார்மென், குமரி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஆர். சின்னசாமி, குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். சேகர், குமரி மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயமோகன்ன், சிதம்பர கிருஷ்ணன் ஆகியோருடன் கேரளாவால் காப்பாற்றப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தனர்.

அவர்களிடம் பேசிய விஜயன், “தமிழ் மலையாள பேதமில்லாமல் மீட்டுப்பணியில் ஈடுபட்டோம். தொடர்ந்து இதே போல் செயல்படுவோம். மீனவர்களுக்கு டீசலும், உணவும் அளித்து தேடுதல் பணியைச் செய்வோம்” என்று தெரிவித்தார். மேலும், வரும் பிப்ரவரி மாதம் குமரியில் நடக்க இருக்கும் சி.பி.எம். மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள குமரி வருவதாகவும் அவர் தெரிவித்தார்