பிங்க் கலரால் பிரச்னையை சந்திக்கும் தெலுங்கானா தேர்த்ல்

தராபாத்

தெலுங்கானா தேர்தலில் பிங்க் என அழைக்கப்படும் இளம் சிவப்பு வண்ணத்தால் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

 

அடுத்த மாதம் 7 ஆம் தேதி தெலுங்கானா மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது ஒட்ட வேண்டிய வேட்பாளர்கள் பெயர் கொண்ட வாக்குச் சீட்டை அச்சடிக்க ஆர்டர் அளித்துள்ளது.

அந்த சீட்டுக்கள் பிங்க் அதாவது இளம் சிவப்பு நிற காகிதத்தில் அடிக்க உள்ளன. தற்போது தெலுங்கானாவை ஆட்சி செய்யும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் அதிகம் இளம் சிவப்பு வண்ணத்தை உபயோகித்து வருகின்றனர். அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் இந்த நிற துண்டை கழுத்தில் அணிகின்றனர்.

அது மட்டுமின்றி அரசின் திட்டங்கள் குறித்து அளிக்கப்படும் விளம்பரங்களிலும் இளம் சிவப்பு வண்ணமே உபயோகப்படுத்தப் படுகின்றன. முக்கியமாக அந்தக் கட்சியின் கொடியும் இதே வண்ணத்தில் உள்ளது.  ஆகவே வாக்குச் சாவடிகளில் இந்த வண்ணத்தை உபயோகிக்க காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த வண்ணம் வாக்களிக்க வரும் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் விளக்கம் அளித்தது. தேர்தல் ஆணையம் இந்த ஆட்சேபத்தை ஏற்கவில்லை. வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது ஒட்டப்படும் சீட்டுக்கள் தவிர மற்றவை எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளது எனவும் இதில் எவ்வித சட்ட மீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.