தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸான பிட்ட கதலு ஆந்தாலஜியின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.

இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் லஸ்ட் ஸ்டோரீஸ் உருவாகப் போவதாகவும், அமலா பால், ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் இந்தியா இன்று பிட்ட கதலு என்ற டைட்டிலில் உருவாகி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் டீசரை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள டீஸரில், நான்கு முன்னணி நடிகைகளான அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர்.