மறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…!

டெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். டெல்லி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவர் மறைந்தார்.

பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அவரின் மறைவு அம்மாநிலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பஸ்வான் வகித்துவந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, மத்திய அமைச்சரான பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.