அனைவருக்கும் எளிய முறையில் மின் இணைப்பு: தவணை முறையில் கட்டணம்

piyush eb connection emi

மோடி அரசின் இரண்டாண்டு சாதனையை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்ட மாநாட்டில் , மத்திய மின் துறை அமைச்சர்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்தியாவில் அனைவருக்கும்  மின் சக்தி இணைப்பு என்பதுக் குறித்து பேட்டி அளிக்கையில் மூன்று முறை மின் தடை ஏற்பட்டது.

 

 

மக்களுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு தடையாய் உள்ளவை குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஏழைகளுக்கு ஏற்கனவே மின் இணைப்பு கட்டணம் இலவசமாக உள்ளது. ஆனால், மின்  இணைப்பிற்கான தொகையை வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மக்களால் கட்ட இயலாமல் உள்ளது. இதனை சமாளிக்க, மின் கட்டணத்தை சுலப மாதத்தவணை (EMI) யில் ஐந்துவருடங்களில் கட்ட வைக்க ஏற்பாடு செய்யபடும் எண்டுர் கூறினார்.  மேலும் மின் துறை அதிகாரிகள் வீடு வீடாகச் செண்டுர் அரைப்பக்க விண்ணப்பத்தாளில், ஆதார் எண், அலைபேசி எண், ஈ-மெயில் முகவரி மற்றும் கையொப்பம் மட்டும் வாங்கி உடனே இணைப்பு தரும் வசதியை உருவாக்குவோம் என்றார்.

விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்த அவர், விவசாயம் மட்டுமின்றி மேலும் பலத்துறைகளுக்கு மின்மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

அவர்  18,452 கிராமங்களுக்கு மின் இணைப்பு   கொடுக்க வேண்டும் என்கிற இலக்கு மே 1, 2017 க்குள் அடையப்படும்  என தெரிவித்தார். அதாவது மே 1 2018 க்கு ஒரு வருடம் முன்னதாகவே இலக்கை அடைய மும்முரமாக செயல்பட்டுவருவதாக தெரிவித்தார்.

POWER JAYA

மின் தடை , குறிப்பாக கோடைக்காலத்தில் அதிகமான அளவில் காணப்படுகின்றது. இந்த செய்தியை தட்டச்சு செய்வதற்குள் இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகள், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தி, அரசே மின் உற்பத்தியில்  ஈடுபட தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.