ஜெய்ப்பூர் :

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள தைக்வாரா ரயில் நிலையத்தில் நேற்று நடந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “இப்போது ரயில் நிலையங்களில் ‘பிளாஸ்டிக்’ கோப்பைகளில் தேநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக இனிமேல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் மட்டுமே தேநீர் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

“சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ரயில்வே துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறிய பங்களிப்பு, இது” என குறிப்பிட்ட பியூஷ்கோயல் “இப்போது நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் மண் குவளைகளில் தேநீர் கொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

“இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சற்று முன்பாக மண் குவளையில் நான் டீ அருந்தினேன். டீயின் சுவை வித்தியாசமாக இருந்தது” என அமைச்சர் கோயல் மேலும் கூறினார்.

– பா. பாரதி