மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவரத்தை அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த டுவிட்டரில், சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளேன், விரைவில் திரும்புவேன் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த வாரம், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்தார். அதன் பிறகு அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தை கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.