கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

மாபெரும் ஹிட் அடித்த பீட்சா திரைப்படத்துக்கான வரவேற்பின் அடிப்படையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. அதற்குப் பெரிய வரவேற்பு எதுவும் இல்லை. பீட்சா 2 படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருப்பார்.

இந்நிலையில் தற்போது பீட்சா 3 படத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பீட்சா 3 படத்தையும் தயாரிப்பாளர் சிவி குமார் தயாரித்து வழங்க உள்ளார்.

பீட்சா 2 தி வில்லா எனப் பெயரிட்டது போல் தற்போது பீட்சா 3-க்கு தி மம்மி என டேக் வெளியிட்டுள்ளனர். பீட்சா 3 படத்தை அறிமுக இயக்குநர் மோகன் அரவிந்த் இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் ஜீரோ, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ஆகிய படங்களில் நடித்த அஸ்வின் நாயகனாக நடிக்கிறார்.