டெல்லியில் பீட்சா டெலிவரிபாய்க்கு கொரோனா… பொதுமக்கள் தவிப்பு…

டெல்லி:

லைநகர் டெல்லியில் பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கி உள்ளது.

இதையடுத்து, அந்த நபர் டெலிவரி செய்த 78 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளே சிறைப்பட்டிருந்தாலும், பீட்சா மோகம் பலரை விடுவதில்லை. இதனால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஏராளமானோர் பீட்சா உள்பட பல உணவுப்பொருட்களை வாங்கி உண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி மால்வியா நகர் என்ற பகுதியில் பீட்சா டெலிவரி செய்து வந்த  நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பீட்சா கடையில் பணியாற்றி வந்துள்ளார்.  அந்த பீட்சா கடை மூடப்பட்டது.

இதையடுத்து, அவருடன் வேலை பார்த்த 17 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சத்தர்பூரில் உள்ள டெல்லி அரசாங்கத்தின் தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தென் டெல்லி மாவட்ட நீதிபதி பி.எம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும்,  கடந்த 15 நாட்களில் 72 வீடுகளுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளதாகவும், அந்த இடங்களை டிரேஸ்  செய்த காவல்துறையினரும், சுகாதாரத்துறையினர், அங்குள்ளவர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டு, அவர்களில் பெரும்பாலோர் சட்டர்பூரில் உள்ள அரசின் தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பலர் வீடுகளிலேயே  தனிமைப்படுத்தப்பட்டு,  வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  வேர்களுக்கு காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சப்ளை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, டெலிவரி நிறுவனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. டெலிவரி செய்யும் போது அனைத்து டெலிவரி பாய்ஸ்களும் முகமூடிகளைப் பயன்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

You may have missed