1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி: சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை

1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மேலும்,  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.349 கோடியில் சுயநிதி திட்டத்தில் 1,253 குடியிருப்பு கள் கட்டப்படும்.

திருமழிசை குத்தம் பாக்கம் கிராமத்தில் ரூ.150 கோடி யில் 20 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில், பொது, நிதி, வீட்டுவசதி. திட்டம் வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை களின் கீழ்  ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்புகள்:

மும்பை செல்லும் மக்கள் பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் தங்க ஏதுவாக, மும்பையில் ஒரு புதிய தமிழ்நாடு இல்லம் அமைக்கப்படும்.

முன்னாள் படைவீரர்களின், கைம் பெண்களின் ஒரு மகளுக்கு வழங் கப்பட்டு வரும் திருமண நிதியுதவி, ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும். 2-வது மகளுக்கும் இந்த நிதி நீட்டிக்கப் படும்.

வேலைவாய்ப்பு, படிப்பு பிற காரணங்களுக்காக அயல்நாடு செல்லும் தமிழர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பின்தங்கிய நிலை யில் உள்ள தாயகம் திரும்பி யோருக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் 500 வீடுகள் நகர்ப்புற பகுதிகளில் ஒதுக்கப்படும்.

அரசுத்துறை நிறுவனத் தணிக் கைத் துறையின் பெயர் ‘மாநில அரசு தணிக்கைத் துறை’ என மாற்றப்படும். மாநிலத்தின் பின் தங்கிய வட்டாரங்கள், ஏனைய வட்டாரங்கள் மற்றும் மாவட்டங் களின் வளர்ச்சி தரவரிசைப் படுத்தப் பட்டு, விருதுகள் வழங்கப்படும்.

வீட்டுவசதி

நகர ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 1,200 சதுர அடிக்கு குறைவான கட்டிடத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரி சீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படாத பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் 1,253 குடியிருப்பு அலகுகள் ரூ.349 கோடியில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.

காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 1,148 மனைகள் ரூ.48 கோடியே 21 லட்சம் மதிப்பில் உருவாக்கப்படும்.

சென்னை மற்றும் ஈரோட்டில், பயன்படுத்த தகுதியற்ற வாரியக் கட்டிடங்களை இடித்து, 303 குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள் ரூ.150 கோடியே 68 லட்சத்தில் கட்டப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதிகள், குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான இதர காலியிடங்களில் பொரு ளாதாரத்தில் நலிவுற்ற குறைந்த வருவாய் பிரிவினருக்காக 500 சதுரஅடி முதல் 650 சதுரஅடி பரப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டப்படும்.

தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டத்தின்கீழ், குடிசை பகுதிகளற்ற நகரங்களை உருவாக்க 1 லட்சத்து 6 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகப் பணிகள் கணினிமயமாக்கப்படும். சென்னை அருகில் உள்ள பெரும் பாக்கத்தில் உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமானத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 1,152 குடியிருப்புகள் ரூ.121 கோடியே 1 லட்சம் மதிப்பில் கட்டப்படும்.

முதன்மை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் ஒரு உறுப் பினருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட் சம் வரை ரூ.100 கோடி கடன் வழங்கப்படும்.

எம்ஜிஆர் பேருந்து முனையம், மாதவரம் புறநகர் பேருந்து முனை யம் ஆகியவற்றில் கண்காணிப்பை மேம்படுத்த ரூ.2 கோடியே 25 லட்சத்தில் முகம் அடையாளம் காட்டும் கேமராக்கள் பொருத்தப் படும்.

கோயம்பேட்டில் உள்ள மலர் அங்காடியின் கிழக்குப் பகுதி யில் அமைந்துள்ள 3 ஏக்கர் நிலத்தில் 40 கோடியில் நவீன மலர் அங்காடி விரிவுபடுத்தப்படும்.

திருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில் 20 ஏக்கரில் ரூ.150 கோடி மதிப்பில் பேருந்து நிலை யம் அமைக்கப்படும். திட்ட அனு மதி விண்ணப்பங்கள், பணி நிறைவு சான்றிதழ்கள் வழங்க ஏதுவாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் ஒற்றைச் சாளர இணையம் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட அறிவிப்புகள் உள்பட மொத்தம்  54 அறிவிப்புகளை 4 துறைகளின்கீழ் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.