ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் ரியோ.இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணணும் வீடியோ பாடல் ஒன்றை நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டனர் படக்குழுவினர் ,அந்த பாடல் அதே நேரத்தில் யூடியூப்பிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.