விமான எஞ்சினுக்குள் காயன் வீசிய பயணி: அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு (வீடியோ0

விமானத்தின் எஞ்சினுக்குள் காயன் வீசியதால், விமானம் புறப்படுவதில் தாமதமானது. உடடினயாக அதை தேடி எடுத்ததால், அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்தில் இருந்து தப்பியது.  சீனாவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று விமானத்தில் பயணம் செய்த  பெண்மணி ஒருவர் தன்னிடம் இருந்து இரண்டு காயன்களை வீசி எறிந்துள்ளார். இதில் ஒன்று விமானத்தின் எஞ்சினுக்குள்ளும், மற்றொன்று விமானத்தின் வெளியேயும் விழுந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த விமான பாதுகாப்பு படையினர், காயன்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருகாயன் விமான எஞ்சின் விளிம்பிலும், மற்றொன்று  விமானம் அருகே கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதமானது. ஒருவேளை விமானம் அப்படியே புறப்பட்டிருந்தால், விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும், காயன்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக  யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டும் என்று விமான நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.