டில்லி,

நாடு முழுவதும் பசு சரணாலயங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி.அகிர், புலிகளை பாதுகாக்கும் ஆணையம் இருப்பதைப்போல் பசுக்களுக்கும் பாதுகாப்பு ஆணையம் அமைக்கும் எண்ணம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவேண்டும் என்றார்.

அதேநேரம் பசுவதைக்கூடங்களிலிருந்து மீட்கப்படும் பசுக்களை யார் பாதுகாப்பது என்ற கேள்வி உள்ளது.

அதற்காக பசு பாதுகாப்புச் சரணாலயங்கள் அமைப்பதோடு பசுக்களுக்கான தீவனம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

பசு சரணாலயங்கள் மூலம் வயதில் மூப்படைந்த பசுக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிவித்த அவர், இத்திட்டம் விரைவில் துரிதப்படுத்தப்படும் என்றார்.