தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை:

மிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் நேற்று, பிளாஸ்மா தானம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்ட நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், கொரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகராட்சி வீட்டு வசதி கட்டடத்தில் 5000 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டம் உள்ளதாகவும், அதுபோல  ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை அல்லாத பகுதிகளிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியவர்,  தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும்,  தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் தமிழக்ததில் பிளாஸ்மா தெரபி மூலம் அளிக்கப்படும் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. இதனால், தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி