பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை…. அசாம் அசத்தல்

கவுகாத்தி:

பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அசாம் மாநில அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை கொடுத்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை உள்பட பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தானம் அளிப்பவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று கர்நாடகா மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது.  மருந்து தயாரிப்பு நிறுவனங் கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில், பிளாஸ்மா சிகிச்சை மூலம் தொற்று பாதித்து   ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதனால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையடுத்து, தலைநகர்  டெல்லியில் 2 பிளாஸ்மா வங்கிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தி லும் பிளாஸ்மா வங்கி தொடங்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநில அரசு பிளாஸ் தானம் அளிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அசாம் அமைச்சர் ஹிமந்தா பீஷ்மா சர்மா அளித்த பேட்டியில், கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவர் 400 கிராம் பிளாஸ்மா தானமாக அளிக்க முடியும். இதை வைத்து இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிளாஸ்மா சிகிச்சை மட்டும்தான் பக்க விளைவு இல்லாது.

பிளாஸ்மா தானம் அளித்தவர் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.