Random image

வரும் 15ந்தேதி முதல் உ.பி. மாநிலத்திலும் பிளாஸ்டிக் தடை: யோகி அரசு உத்தரவு

லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில் வரும் 15ந்தேதி முதல் பிளாஸ்டிக்குக்கு மீண்டும்  தடை விதிக்கப்படு வதாக மாநில அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, உபயோகம் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது உ.பி.மாநில அரசும் தடை விதித்து உள்ளது. வரும் 15ந்தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதாக அறிவித்து உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், சில நாடுகள் தடை விதித்தும் உள்ள நிலையில், இந்தியாவும் 2022ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. தமிழகமும், அடுத்த ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.

தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்துள்ளது. வரும் 15ந்தேதி முதல் பிளாஸ்டிக்கு பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக்கு தடை விதிப்பதாக யோகி தலைமையிலான அரசு உத்தரவிட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தால், தடை விலக்கப்பட்டது.

தற்போது மீண்டும் பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட் கள் தயாரித்தால்,  அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது

You may have missed