பிளாஸ்டிக் தடை: அரசாணைக்கு தடை விதிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு

சென்னை:

மிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், அரசின் பிளாஸ்டிக் தடை ஆணைக்கு, தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள் ளது. இதற்கான எச்சரிக்கை அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், உற்பத்தி யாளர்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிளாஸ்டிக் தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசின் தடை உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த உயர்நீதி மன்றம்,  மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை  21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.