அசாம் மாநிலத்தில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வுகாத்தி

சாம் மாநிலத்தில் பிளாட்டின உலோக தாது உள்ளதை திபுர்கர் பல்கலைக்கழக நில அமைப்பியல் வல்லுனர் (ஜியாலஜிஸ்ட்) கண்டு பிடித்துள்ளார்.

உலகின் மிகவும் விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்று பிளாட்டினம் ஆகும். பிளாட்டினம் இந்தியாவில் ஏற்கனவே தமிழ்நாடு, ஒரிசா மற்றும் கர்நாடகாவில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திபுர்கர் பல்கலைக்கழகத்தில் நில அமைப்பியல் வல்லுனராக பணி புரியும் திலிப் மஜும்தார் இது குறித்து அசாம் மாநிலத்தில் பரிசோதனை நிகழ்த்தினார்.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு சுமார் 250 கிமீ தூரத்தில் மக்கள் வசிக்காத ஒரு மலை அடிவாரத்தில் ஏராளமான பிளாட்டின தாதுக்கள் உள்ளதை மஜும்தார் கண்டறிந்துள்ளார். பிளாட்டின தாது சாதாரணமாக கண்களால் காண முடியாது என்பதால் கடும் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மலைப்பகுதியில் பிளாட்டினம் மட்டுமின்றி இரும்பு, வெனடியம், டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களும் உள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இங்கு பிளாட்டினம் அதிக அளவில் உள்ளதாகவும் அது எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் பரிசோதனை நடப்பதாகவும் மஜும்தார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உலோகம் எங்கு கிடைக்க உள்ளது என்பதை தெரிவித்தால் இதை திருட பலர் முயல்வார்கள் என்பதால் சரியான இடத்தை சொல்ல மஜும்தார் மறுத்து விட்டார். இந்தியாவில் பிளாட்டினம் தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 1958 என்னும் விலையில் விற்கப்படுகிறது.

You may have missed