பின்னணி பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி காலமானார்

சென்னை:
பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். அவருக்கு வயது 87. கமல் குழந்தையாக களத்தூர் கண்ணம்மா படத்தில் பாடிய ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலைப் பாடியவர்.

 

‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’, ‘மியாவ் மியாவ் பூனைக்குட்டி’, ‘நான் சிரித்தால் தீபாவளி’ (நாயகன்), ‘பேசியது நானில்லை கண்கள்தானே?’ உட்பட 500 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர்.இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.