உலகின் நீண்ட நாள் அரசராக இருந்த புகழுடன் மறைந்த தாய்லாந்து மன்னரின் மறைவையடுத்து இளவரசர் மகா வஜிரலோங்கோர்ன் எப்போது அரசராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்புகள் இப்போது எழுந்துள்ளது.

thai_prince

மறைந்த மன்னரைப்போல மக்கள் செல்வாக்கைப் பெற்றவரல்ல இளவரசர் மகா வஜிரலோங்கோர்ன். இவரது தனிப்பட்ட வாழ்க்கை பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வருகிறது. 64 வயதான இளவரசர் இன்னும் ப்ளேபாய் போல வலம் வருவதும், இதுவரை மூன்று முறை திருமணமாகி விவாகரத்து செய்ததும் மக்களிடையே இவரது செல்வாக்கை வெகுவாக குறைத்திருக்கிறது.
இவர் தனது மூன்றாம் மனைவி சுவடீயை ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரிலும், இரண்டாம் மனைவியை விபச்சார குற்றச்சாட்டின் பேரிலும் தள்ளிவைத்து விட்டார். இரண்டாம் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளின் அரசுரிமையும் பறிக்கப்பட்டது.
இளவரசர் மகா வஜிரலோங்கோர்ன்கடந்த 1972-ஆம் ஆண்டிலேயே அரியணைக்கான வாரிசாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுவிட்டார். அதனால் மன்னர் பூமிபால் மறைந்தவுடன் இளவரசர் அரசராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது ஆனால் தனக்கு சிறிதுகாலம் அவகாசம் வேண்டுமென்று பிரதமர் ப்ராயுத் சனோச்சாவை அழைத்து அவர் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் இளவரசர் மகா வஜிரலோங்கோர்னை விட அவரது மூத்த சகோதரி இளவரசி சிரிந்தோர்ன் மீதுதான் மக்களுக்கு அதிக பிரியம். மக்கள் அவரை “பிரின்ஸஸ் ஏஞ்சல்” என்று அழைப்பது வழக்கம். ஆனால் அரசர் பூமிபாலின் விருப்பம் தனது மகன் பட்டத்து அரசராக வரவேண்டும் என்பதுதான். இளவரசிக்கு இராணுவத் துறையிலும் செல்வாக்கு அதிகம். அவரால் ராணுவத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க இயலும் ஆனால் அது அரசரின் விருப்பத்துக்கு மாறான செயலாக அமைந்துவிடும் என்பதால் அவர் அதை செய்யமாட்டார் என்று தெரிகிறது.