லண்டன்:

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றவும், அபராதம் விதிக்கவும் கேப்டன், நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல் ஸ்டம்ப் பைல்ஸ் தாக்குதலில் இருந்து விக்கெட் கீப்பர்கள் கண்களை பாதுகாக்கவும் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது.

லண்டனில் உள்ள மெரிலிபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) கிரிக்கெட் போட்டிக்கான சர்வதேச விதிகளை உருவாக்கி வருகிறது. இந்த வகையில் புதிய விதிகளின் படி மைதானத்தில் உள்ள அதிகாரிகள், எதிரணியினருடன் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக நீக்கவோ மற்றும் அபராதமாக எதிரணிக்கு 5 ரன்களை வழங்கலாம். சம்மந்தப்பட்ட வீரரை நீக்க அணி கேப்டன் மறுத்தால் போட்டியை எதிரணிக்கு சாதகமாக நடுவர் அறிவிக்கலாம். இரு அணி கேப்டன்களும் மறுத்தால் போட்டியை ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

பந்து, மைதானத்தை சேதப்படுத்தும் வீரர்களின் அணிக்கு எதிராக வீக்கெட் வீழ்த்தும் இலக்கு 10ல் இருந்து 9ஆக குறைக்கப்படும். மாற்று (சப்ஸ்டிடியூட்) வீரர்கள் பேட்டிங் செய்யவும், விக்கெட் கீப்பராக செயல்பட விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டம்ப் பெயில்ஸ் தாக்கி வீக்கெட் கீப்பர்கள் கண்களை பாதிப்படையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணிம் செய்தபோது தென் ஆப்ரிக்கா வீரர் மார்க் பவுச்சர் கண்களில் அடிபட்டு கிரிக்கெட்டில் இருந்து விலக நேரிட்டது.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் 2000ம் ஆண்டு பங்களாதேஷில் நடந்த ஆசிய கோப்பைக்கான போட்டியின் போது அனில்கும்ப்ளே வீசிய பந்து பேட்ஸ்மேன் காலில் பட்டு இவரது வலது கண்ணை தாக்கியது. இதில் காயமறந்த அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் இதோடு முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு டி 20 போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பெயில்ஸ் தாக்கி கண்களில் காயம் ஏற்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் காரணமாக கிரிக்கெட் சட்டப்பிரிவு 8.3ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு தென்ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் கோரிக்கை விடுத்தன. எளிதில் விழும் பெயில்ஸ்.க்கான புதிய வடிவமைப்பையும் இவர்கள் முன்மொழிந்துள்ளனர். ஒருவரது கண்பார்வையை பாதிக்கும் செயலை தடுக்க கூடிய வடிவமைப்பு பரிசீலனை செய்யப்படும். இதற்கான காப்புரிமையை பெறும் முயற்சியில் இரு நாடுகளும் முயற்சிக்கின்றன. இது ஒரு நீண்ட கால பணியாகும். எனினும் இதுபோன்ற ஒரு உபகரணத்தை கிரிக்கெட் சட்டம் அனுதிக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது. எம்சிசி ஆட்சி மன்ற குழு அனுமதித்தால் இதை பயன்படுத்தலாம்.

வீரரின் கண்களை பாதுகாக்கும் வகையில் ஸ்டெம்பில் இருந்து பெயில்ஸ் வெளியேறும் தூரத்தை குறைக்கப்பட வேண்டும். இதற்கு ஆட்சி மன்ற குழுவும், மைதான ஆணையமும் அனுமதி அளிக்க வேண்டும். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் எம்சிசியு விக்கெட் கீப்பரான குஸ் கென்னடி வடிவமைப்பில் “ ஆப் மற்றும் லெக் ஸ்டெம்ப்களில் ஓட்டை போட்டு, சிறிய அளவு மற்றும் குறைவான எடை கொண்ட பந்தை துணியில் சுற்றி வைக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெயில்ஸ் அதிக தூரம் பறக்காது. 3 அங்குலத்திற்கு குறைவான அளவே இதனால் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.