Random image

ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கிறது.

ஐபிஎல் அணிகள் தங்களது முக்கிய வீரா்களை தக்க வைக்கும் காலக்கெடு கடந்த 20ம் தேதியோடு முடிவடைந்தது. புதிய வீரா்களை தோ்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தங்கள் வசமிருந்த வீரா்கள் பலரை விடுவித்துள்ளன.

சிஎஸ்கே அணியிலிருந்து முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18 அன்று நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு எங்கு நடைபெறும் என்பது முடிவு செய்யப்பட வில்லை. இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் நடக்க உள்ளது. அந்தத் தொடா் சுமுகமாக முடிவடையும் பட்சத்தில், ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடத்த வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.

You may have missed