‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி அவசர வழக்கு

விஜய் நடித்திருக்கும் சர்கார்  படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது

மெர்சல் படத்தை அடுத்து விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

 

 

சர்கார் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில்  பெரும் வரவேற்பு பெற்றது. படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது.  அந்நிகழ்ச்சியில் விஜயின் பேச்சு பெரும் விவாதத்துக்குள்ளானது.

படத்தின்இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் சர்கார்  பட விஜய்யின் கதாபாத்திரத்திற்கான இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் சர்ரு வில்லத்தனம் கலந்ததாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிரித்தது.

படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சர்கார் படத்துக்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்துள்ளார்.  அவர் தனது மனுவில், “சர்கார் படத்தின் கதை – திரைக்கதை தன்னுடையது. செங்கோல் என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். எனது கதையை திருடி சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார். எனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருப்பதாகவும்,  வழக்கை விசாரிக்க நீதிபதி எம்.சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: plea-against-vijay-s-sarkar-in-chennai-high-court, ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி அவசர வழக்கு
-=-