பஜ்ஜி கடைக்காரர் திருமணத்துக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

 

சென்னை,

ஜ்ஜி கடைக்காரரின் திருமணத்திற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

ஓய்வுக்காக அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு ஸ்டாலின் வருவது வழக்கம்.  அப்போது, அங்கு கடைகள் வைத்துள்ள சிறுகுறு வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுவார்.

அவ்வாறு பேசுவதன் காரணமாக  கடற்கரையில் பஜ்ஜி விற்பனை செய்பவர் ஒருவர் அவருக்கு நெருக்கமானார்.

அதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், மெரினாவில் பஜ்ஜிக் கடை நடத்தி வரும் அஜித்குமார் என்பவர், தனக்கு  வரும் 25ம் தேதி சாந்தோமில்  திருமணம் நடைபெற இருக்கிறது.  நீங்கள் கண்டிப்பாக வந்து வாழ்த்த வேண்டும் என்று அழைத்துள்ளார்.

ஸ்டாலினும், அப்போது திருமணத்துக்கு வருவதாக உறுதி  அளித்துள்ளார்.

ஆனால் பஜ்ஜி கடைக்காரர்  அஜித்குமார்,  ஸ்டாலின் ஸ்டாலின் வருவாரா? மாட்டாரா?  என்ற குழப்பமோன நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென திருமணத்திற்கு வருகை தந்தார். இது மணவீட்டாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஸ்டாலின் விசிட்  மணமகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணமக்கள்  இருவரையும் வாழ்த்திய ஸ்டாலின் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Pleasant surprise to visit the marina shop person wedding, பஜ்ஜி கடைக்காரர் திருமணத்துக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-=-