பேனர் வைப்பதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:

மிழகம் முழுவதும் சாலையோரங்களில் பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், திமுகவினர் பேனர் வைக்க வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

வரவேற்கத்தக்க ஒன்று!

பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும்.

அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்! 

 இவ்வாறு அவர் கூறி உள்ளார்