சினிமா விமர்சனங்களை உடனே வெளியிட வேண்டாம்! ஊடகங்களுக்கு விஷால் வேண்டுகோள்

சென்னை,

விக்ரம்பிரபு நடிக்கும் நெருப்புடா படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் விஷால், புதிய திரைப்படங்கள் வெளியான உடன் விமர்சனங்களை வெளியிடும் போக்கை முன்னணி ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும்,

விமர்சனம் என்ற பெயரில் ஊடகங்களில் கூறப்படும் தகவல்களால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்தும், மனம் புணம்படாத படி விமர்சனம் செய்யும்படி ஊடகங்களுக்கு கோரிக்கை வைத்தார்.