கோலியை சீண்டுவது நமக்குதான் ஆபத்து – ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் கருத்து!

சிட்னி: இந்தியக் கேப்டன் விராத் கோலியை பேட்டிங்கின்போது சீண்டாமல், அவரை ஸ்விட்ச்ஆஃப் நிலையில் வைத்திருப்பதே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு நல்லது என்றுள்ளார் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹேசில்வுட்.

இந்தாண்டு இறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையில், அந்நாட்டு மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஹேசில்வுட் கூறியுள்ளதாவது, “விராத் கோலியைப் பொறுத்தவரை, அவர் களத்தில் ஃபீல்டிங் செய்யும்போது சீண்டி, இவரின் கவனத்தை சிதறடிக்கலாம். அதில் பிரச்சினையில்லை. ஆனால், பேட்டிங்கின்போது அவரை சீண்டினால் அது ஆபத்தாக முடியும்.

அதற்கான விலையை, கடந்தமுறை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நன்றாகவே அனுபவித்தோம். அவரை சீண்டும்போதுதான் அவருக்குள் இருக்கும் பெரிய ஆற்றல் வெளிப்படுகிறது. எனவே, பேட்டிங் செயல்முறையின்போது அவரைக் கொஞ்சம் ஸ்விட்ச்ஆஃப் செய்து வைத்தால், அதன்மூலம் அவரை அவுட்செய்வது எளிது” என்றுள்ளார் ஹேசில்வுட்.