நெட்டிசன்:

குமார் துரைசாமி ( Kumar Duraisamy ) அவர்களின் முகநூல் பதிவு

இட ஒதுக்கீடு பற்றி குறை சொல்லிட்டு இருப்பவர்கள் கவனத்திற்கு.

நல்ல கல்லூரிகளில் 1,5 மார்க் தான் வித்தியாசம் . அதிகப்பட்சமாக 10 மார்க் . 60% பேர் +2 வகுப்பிற்கு பிறகு கல்லூரி களுக்கு செல்வது இல்லை என்று புள்ளி விவரங்கள் இருக்கிறது.

ஏழ்மை , சூழல் , விவரங்கள் அறியாமை என்று பல காரணிகள் இருக்கும் . இதையும் மீறி படிக்க வருபவர்களுக்கு சந்தர்ப்பங்கள் தான் இட ஒதுக்கீடு தருகிறது .

எல்லா கல்லூரிகளில் இப்படி தான் நிலைமை இருக்கும். அதிக மதிப்பெண் வித்தியாசம் சில கல்லூரிகளில் இருக்கலாம் , அதற்கு காரணம் ஏழைகள் கல்லூரி படிப்பை கைவிடுவது அதிகம் . (60% என்ற புள்ளி விவரத்தில் இவங்க பங்கு தான் அதிகமாக இருக்கும் ) குறைந்த மதிப்பெண் உள்ள ஏழைகள் கல்லூரிகளில் சேர்வது நமக்கு தெரியலாம் ,ஆனால் அதை விட அதிக மதிப்பெண் உள்ள ஏழைகள் கல்லூரிகளில் சேராமல் இருக்க கூடும் .