‘அமைதியாக இருங்கள்’: இணையவசதி இல்லாத அசாம் மக்களுக்கு பிரதமரின் ‘அசத்தல் டிவிட்’

டெல்லி:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வன்முறைகள் வெடித் துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அசாம் மக்கள் அமைதியாக இருங்கள் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் போட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது டிவிட்டில்,  ”குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து அசாம் மக்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த சட்டத்திருந்த மசோதாவால் அசாமியர் களின் உரிமை களையோ அவர்களது தனிப்பட்ட அடையாளத்தையோ அழகிய கலாச்சாரத்தையோ யாரும் பறித்துவிட முடியாது. அசாமியார்களின் மொழி,கலாச்சாரம், பண்பாடு, அரசியல், நிலம் சார்ந்த உரிமைகள் ஆகியவற்றை அரசியலமைப்பு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்க தாமும் மத்திய அரசும் உறுதி ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அசாமில் கடந்த 3 நாட்களாக வன்முறை தலைவிரித்தாடுகிறது.

அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறை காரணமாக, பாஜக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அங்கு அதிகரித்து வரும் மக்கள் போராட்டம் காரணமாக, இணையதள சேவைகளையும், சமுக வலைதள  சேவைகளையும் கடந்த 2 நாட்களாக  மத்திய அரசு முடக்கி உள்ளது.  இதனால், அம்மாநில மக்கள் வெளி உலக  செய்திகளை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்,  பிரதமர் மோடி, தனது டிவிட்டர் இணையதளம் மூலம், அச்சாம் மக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அசாமில் இணையதளமே முடக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் வேண்டுகோள் அவர்களுக்கு எவ்வாறு  சென்றடையும் என்றும், சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இதுவே டிவிட்டர் வலைதளத்தில்  டிரென்டிங்காகி வருகிறது.

ஏராளமானோர் பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் பதிலளித்து வருகின்றனர்.

முதலில் இணையதள சேவையை தொடங்கி விட்டு உங்களது வேண்டுகோளை டிவிட்டரில் பதிவிடுங்கள் என்றும், 

துரதிருஷ்டவசமாக அசாம் மக்கள் உங்கள் டிவிட்டை பார்க்கவோ, படிக்க முடியாத நிலை யில் உள்ளனர், இங்கு உடனே இணையவசதியை ஏற்படுத்துங்கள் என்று கூறி உள்ளார்.

மற்றொருவர்,  அங்கு இணையதள வசதியே இல்லாத நிலையில் ஒரு நாட்டின் பிரதமருக்கு,  அதுகூட தெரியாமல், அம்மாநில மக்களுக்கு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ள அவலம், நமது நாட்டில்தான் நடைபெறும் என்று அங்கலாய்த்து உள்ளார். 

வேறொருவர், பிரதமர் நமது நாட்டில்தான் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டில் உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மற்றொருவரும், அசாம் மாநிலத்தின் இணையதள சேவையை முடக்கிவிட்டு, பிரதமர் அம்மாநில மக்களுக்கு ஜோக்குகளை அனுப்பி உள்ளார் என்று விமர்சித்து உள்ளார்.

மேலும் ஒருவர், நமது நாட்டில் என்ன நடைபெறுகிறது, மக்களின் மனநிலை என்ன என்பதை அறியாமலேயே பாஜக அரசு, மக்களின் மீது தாக்குதலை தொடுக்கிறது என்று கண்டனம் தெரிவித்து உள்ளர்.

இன்னொருவர், மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து, இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றாமல் விடமாட்டார்களோ என்றும்…. மதநல்லிணக்கம் குழிதோண்டி புதைக்கப்படுமோ என்றும் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

வாசகர்களுக்காக இங்கே சில டிவிட்டர் பதிவுகள்….